// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசியக் கல்லூரி, ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரிக்கு இடையே பண்பாடு, கலாச்சாரம் வளர்க்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருச்சி தேசியக் கல்லூரி, ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரிக்கு இடையே பண்பாடு, கலாச்சாரம் வளர்க்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தேச பக்தியையும் , தெய்வபக்தியையும் இணைந்து வளர்க்கும் பாரம்பரியப் பெருமை கொண்ட திருச்சி தேசியக்கல்லூரி ( தன்னாட்சி ) மற்றும் கரூர் , ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரி ஆகிய இரு கல்லூரிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது . புழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்து , ஆன்மிகம் , பண்பாடு , கலாச்சாரம் ஆகியவற்றை மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன் ஆகும் . 



இந்நிகழ்வில் கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் செயலர் பூஜ்யஸ்ரீ யாதீஸ்வரி நீலகண்டப்ரியா அம்பா அம்மையார், திருச்சி தேசியக்கல்லூரியின் செயலர் ரகுநாதன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் . தேசியக்கல்லுாரியின் முதல்வர் ( பொ ) முனைவர் குமார் வரவேற்க , சாரதா நிகேதன் கல்லுாரி முதல்வர் முனைவர் நாகதீபா சிறப்புரையாற்றினார்.  " தேகம் , தேசம் , தெய்வம் " இவற்றில் தேசம் என்பது தேசியக்கல்லுாரி , தெய்வம் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி இந்தப் பெருமைமிகு இரு கல்லூரிகளும் செயல்பாட்டில் , கருத்துணர்வில் இணைந்தவை . மாணவர் நலன் காக்க இணைந்து நாம் செயல்படுவோம் என்று பூஜ்யஸ்ரீ மாதாஜி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக வேதியியல் துறைப்பேராசிரியர் Dr. கணேஷ் ராஜா நன்றி கூறினார் .


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments