NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தங்கத்தேர் இழுத்த தொண்டர்கள்

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தங்கத்தேர் இழுத்த தொண்டர்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர்  விஜயகாந்த் அவர்களின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழிபாடுகள் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் உறையூர் பகுதி செயலாளர் மோகன் ஏற்பாட்டின் கீழ் திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் நிறுவனத் தலைவர் பூரண குணமடைந்து பல்லாண்டு வாழ வேண்டி கழக உயர்மட்ட உறுப்பினர்கள் தொண்டர்கள்   தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.



இந்நிகழ்வின் போது மாநில மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர் வஞ்சி குமரவேல்,மாவட்ட அவைத் தலைவர் அழகராஜ் ,அரியமங்கலம் பகுதி செயலாளர் அலெக்ஸாண்டர்,மார்க்கெட் பகுதி இளைஞரணி செயலாளர் கே ராஜா, வழக்கறிஞர் ஜயப்பன் மலைக்கோட்டை பகுதி அவைத் தலைவர் ஜி மோகன் , காட்டூர் பகுதி செயலாளர் டிடி கார்த்திகேயன், ஆகியோர் உடன் இருந்தனர் 

Post a Comment

0 Comments