BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

 தமிழ்நாடு முதல்வர் மு‌.க.ஸ்டாலின்  அவர்களின் தலைமையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் துவக்க விழா மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும்  தமிழகம் முழுவதும் அனைத்து  தலைநகரங்களிலும் போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்ற   முதல்வர் அவர்களின் ஆணைக்கு ஏற்பவும் திருச்சி அண்ணா  விளையாட்டு அரங்கில்நடைபெற்றநிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களுடன் கலந்து கொண்டார்.




மாணவ,மாணவியர்கள் பல்லாயிரக்கணக்கில் குழுமியிருந்த அரங்கில் காணொளி வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது மாணவ-மாணவியர்கள் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் முதல்வராக வரவேண்டும் அதற்கு தடையாக உள்ள தீய பழக்கவழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும் போதை பழக்கத்திற்கு ஓரிருவர் அடிமை ஆவதால் சமூக பிரச்சினையாக மாற்றப்பட்டு  ஒட்டுமொத்த இளைய சமுதாயத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதையும் குறிப்பிட்டு மாணவ சமுதாயம் இளைய சமுதாயம் இப்படிப்பட்ட தீமைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாயுள்ளத்தோடு மன்றாடி கேட்டுக் கொள்வதாகவும் சட்டத்தின் ஆட்சியில் எங்கு தவறு ஏற்பட்டாலும் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று எச்சரித்து அரசு மற்றும் தன்னார்வலர்களை துணைகொண்டு புதிய சமுதாயம் படைத்திடுவோம் வாரீர் வாரீர் என கேட்டுக்கொண்டார்கள்






எழுச்சி மிகுந்த இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ்,  சௌந்தரபாண்டியன்,கதிரவன், பழனியாண்டி, அப்துல் சமது, மாநகர காவல்துறை ஆணையர்,   மாநகராட்சி ஆணையர், அனைத்து துறை அதிகாரிகள், மாநகர மண்டல குழு தலைவர் திருமதி. ஜெய நிர்மலா, மாநகர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


நிருபர் ஜான் பிரகாஷ் 

Post a Comment

0 Comments