BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற முதியவரின் உயிரை காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை

இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற முதியவரின் உயிரை காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை

 இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற முதியவரின் உயிரை காப்பாற்றி திருச்சி அப்போலோ இதய நோயியல்  துறை மருத்துவர்கள் சாதனை...!

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை குழுவினர், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்...



தஞ்சையை சேர்ந்த 65 வயது முதியவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஞ்சியோ செய்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அச்சத்தின் காரணமாக முதியவர் ஆஞ்சியோ செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் இதய மருத்துவரை சந்திக்க சென்றவர் மருத்துவமனையில் காத்திருந்த போது மூர்ச்சைகாகி விழுந்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த போது இதயத்தை சுற்றி ரத்த கசிவு இருப்பது தெரிய வந்தது. 



இதனையடுத்து முதியவர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உடனடி அவசர இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக இதய ரத்த குழாய்கள் சரி செய்யப்பட்டு இதயத்திற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்யவும் வழி செய்யப்பட்டது. மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்பட்டு ரத்த கசிவு தடுக்கப்பட்டு துளையும் அடைக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பிற்கு பிறகு 6 வது நாளில் முதியவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தெரிவித்தனர்



செய்தியாளர் சந்திப்பின் போது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஸ்ரீகாந்த் பூமனா, டாக்டர் அரவிந்த், இதய மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் ரோகிணி, டாக்டர் சரவணன் மற்றும் இதய நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் டாக்டர் காதர் சாகிப், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் சாம் சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் துணை பொது மேலாளர் சங்கீத ராம மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments