BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி கொள்ளிடம் ரயில்வே பாலத்தின் தூண்களில் அரிப்பு: சீரமைக்க கோரி ஆம் ஆத்மி கட்சி மனு

திருச்சி கொள்ளிடம் ரயில்வே பாலத்தின் தூண்களில் அரிப்பு: சீரமைக்க கோரி ஆம் ஆத்மி கட்சி மனு

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள ரயில்வே பாலத்தின் தூண்களில் ஏற்பட்டுள்ள அரிப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர்..

ஆம் ஆத்மி கட்சி மாநில மகளிர் அணி செயலாளரும் திருச்சி மண்டல பொறுப்பாளருமான ஸ்டெல்லா மேரி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மூத்த கண்காணிப்பு பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர்...




இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்கள் இளங்கோ, விமல் ராஜ், ஜாகீர், விஜய் , சர்புதீன் , செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.. அந்த மனுவில் திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் இருப்பு பாதையில் இரு வழியான ஶ்ரீரங்கத்திற்கு ( TPJ - MS) முதலான இருபுறமும் கொள்ளிடம் பாலம் உள்ளது.. இந்த பாலம் தொடங்கும் ஏழு சிமெண்ட் காரிடர்களில்  கொள்ளிடம் ஆற்றின் தொடர் வெள்ள பெருக்கு மற்றும் மண் அரிப்பு காரணமாக சிமெண்ட் மற்றும் இரும்பு காரிடர்களில் அரிப்பும் துருபிடித்தலும்  ஏற்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது... 




தொடர் மழை மற்றும் காவேரி ஆற்றின் நீர்வரத்து அதிகமாகும் சூழலில் மேலும் பழுதடையும் எதிர்காலத்தில் பெரும் ரயில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது...அதனால் பெரும் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது...

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை , காசி முதல் ராமேஸ்வரம் வரை அனைத்து மக்களும் புனித யாத்திரை செல்லும் வழித்தடம் ஆகும்...

எனவே உடன் துரிதமாக செயல்பட்டு உரிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments