// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** போலீஸ் பார்வை மாத இதழ் சார்பில் தமிழ் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி

போலீஸ் பார்வை மாத இதழ் சார்பில் தமிழ் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி

 காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ், ஏரோஸ்கட்டோபால் அசோசியேஷன், கோடக் மகேந்திரா பேங்க் சார்பில் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்க்கச் செய்யும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்..


காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அன்பு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு, அஜய் தங்கம் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் (கண்டோன்மென்ட் சரகம்),ஜோசப் நிக்சன் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து),சுந்தரமூர்த்தி திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் (கோட்டை சரகம்) , அறிவழகன்

துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திருவரும்பூர் திருச்சி, அஜீம் காவல் ஆய்வாளர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி மாநகரம், சிவக்குமார் காவல் ஆய்வாளர் கண்டோன்மென்ட் திருச்சி மாநகரம்,

ரமேஷ் காவல் ஆய்வாளர் கண்டோமென்ட் போக்குவரத்து திருச்சி மாநகரம் 





பாலகிருஷ்ணன்காவல் ஆய்வாளர் எ.புதூர் திருச்சி மாநகரம் , ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியில் தலைமை நிருபர் ராகேஷ் சுப்ரமணியன், கௌரவ ஆசிரியர் புலவர் தியாகசாந்தான், முதன்மை ஆசிரியர் சிவக்குமார், தலைமை நிருபர் சகாயராஜ், தலைமை நிருபர் வேல்முருகன்,சிறப்பு நிருபர் பாண்டியராஜன், நிருபர் சிவபிரகாசம்,நிருபர் மணிகண்டன், நிருபர் குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர், மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments