// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி பெட்டவாய்த்தலையிலிருந்து பிரிந்து தஞ்சாவூர் வரை செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.  சுமார் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி கிடைக்கிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் எட்டு கிலோமீட்டர் தூரம் வரை இந்த வாய்க்கால் பாய்கிறது. 


மிகவும் முக்கியமான இந்த வாய்க்காலில் கடந்த சில வருடங்களாக வீடுகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக கலக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த நீரின் தன்மை முற்றிலுமாக மாறி நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.  



இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கொசுக்கள் பரவி பல்வேறு நோய்களும் ஏற்பட்டு வருகிறது எனவே உடனடியாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்

Post a Comment

0 Comments