BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம்

ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம்

 தஞ்சையை ஆண்ட மாமன்னர் தஞ்சை பெருவுடையார் கோவில் கண்ட சிவபாத ராஜசேகர தேவர் என்ற ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக கார்த்திக் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சத்து மருந்துகள், சளி மருந்துகள், கபசுர குடிநீர், உணவு பொட்டலங்களை தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கினார்

 

இந்நிகழ்ச்சியில் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் ராஜ ராஜ சோழனின் நினைவிடமான கும்பகோணம் அருகில் உள்ள உடையாலூரில் ராஜ ராஜ சோழனுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

 நிகழ்ச்சியில் டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் விஜய கார்த்திக்,டாக்டர் குமார், சுசீலா ராமு, வனஜா ஜெனட், பேராசிரியர் ரவி சேகர்,உறையூர் கார்த்திக், சிந்தாமணி சந்தான கிருஷ்ணன், டாக்டர் சகுந்தலா, டாக்டர் ஜமீர் பாதுஷா மற்றும் மனோஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.     படவிளக்கம்: மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் சத்து மருந்துகள், சளி மருந்துகள், கபசுர குடிநீர், உணவு பொட்டலங்களை முக்குலத்தோர் சமூக நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கினார். அருகில் பேராசிரியர் ரவிசேகர், டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் சகுந்தலா சந்தானகிருஷ்ணன், டாக்டர் அமீர்பாஷா, மனோஜ், கார்த்திக் மற்றும் பலர் உள்ளனர்.

Post a Comment

0 Comments