NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

 திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ ஆரம்ப பள்ளியில் இன்று நடைபெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்  ரேபிடோ மேலாளர் ஈஸ்வர், அலுவலர்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில் கண்புரை மற்றும் பார்வை குறைபாடு போன்ற அனைத்து கண் நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது.




கிட்டப்பார்வை,  தூரப்பார்வை உள்ளவர்களுக்கு  கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments