NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இன்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிநடிகை ஆண்ட்ரியா பங்கேற்பு

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இன்று பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிநடிகை ஆண்ட்ரியா பங்கேற்பு

 போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இன்று மாலை நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மொராய்ஸ் சிட்டியில் இன்று மாலை நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது...



வசந்த் அண்ட் கோ மற்றும் அருண் ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியானது, சா்வதேச தரத்துடன் கூடிய துல்லியமான ஒலி மற்றும் கண்களை கவரும் ஒளி அமைப்புகள் கொண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது இந்த இசை குழுவில் உள்ள இசைக் கலைஞா்கள் அனைவரும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவா்கள். இதில், நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று தனது இனிமையான குரல் மூலம் சூப்பா் ஹிட் பாடல்களை இடைவிடாது பாடவுள்ளாா். போதைப் பொருளுக்கு குட் பை சொல்லுங்கள் என்ற விழிப்புணா்வு வாசகத்துடன், போதைப் பொருள்களால்ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணா்வுக்காக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments