// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் சார்பில்  திருச்சி அரியமங்கலம் ரஹ்மத் பள்ளிவாசல் மதரஸாவில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் மனவளர்ச்சி குன்றிய, பார்வையற்ற, செவித் திறனற்ற, பேச்சு திறனற்ற, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்கள் என 100 பேருக்கு தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. 



சிறப்பு விருந்தினராக முனைவர் ஹஜ் மொய்தீன் கலந்து கொண்டு உரையாற்றினார். தேவையுடைய மக்களுக்கு தேடிச் சென்று உதவிச் செய்திட இஸ்லாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.






35 வது வார்டு கவுன்சிலர் திரு. சுரேஷ், திருச்சி கிழக்கு கோட்டத் தலைவர் திரு. மதிவாணன்,  திண்டுக்கல் ஜமாஅத் உறுப்பினர் ஜனாப். சுல்தான், சுமைதாங்கி ஆசிரியர் ஜனாப். எகியா, அரியமங்கலம் ஜனாப்


 சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஜாமஅத் பணிகளை வெகுவாக பாராட்டி பேசியதுடன், இது போன்ற பணிகளுக்கு அரசு நிர்வாகம் உறுதியாக இருக்கும் என திரு. மதிவாணன் கூறினார். 


Post a Comment

0 Comments