திருச்சி கே.கே. நகர் சாலையில் எல்ஐசி காலனி, சபரி மில் வளாகத்தில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்காட்சியை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த திறப்பு விழாவின் போது பொருட்காட்சி சங்கத் தலைவர் அன்வர் ராஜா, கப்பல் வடிவமைப்பாளர் மதுரை ஆர்டிஸ்ட் சரவணன், ஏர்போர்ட் சலீம், பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், நாகர்கோவில் பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் கூறுகையில், பொருட்காட்சி இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். டைட்டானிக் கப்பல் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
திருச்சி மக்கள் பயனடையும் வகையில் பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில் பாட்டுக்கேற்றவாறு நடனமாடும் ரோபோடிக் நாய், புகைப்படங்கள் எடுக்கும் ரோபோட்டிக் பெண் இடம்பெற்றுள்ளது.ஜிக்ஜாக் என்ற புது வகையான ராட்டினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானாவில் துபாய் கண்காட்சி நடத்தினோம் என்றார்.
0 Comments