BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** தமிழ் சித்த மருத்துவ நூல்கள்,ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்து கோரிக்கை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர பாய் கலுபாய் திருச்சியில் பேட்டி

தமிழ் சித்த மருத்துவ நூல்கள்,ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்து கோரிக்கை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர பாய் கலுபாய் திருச்சியில் பேட்டி

   ஆயுஷ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று சித்த மருத்துவத்தின் தந்தை, மாமுனிவர் அகத்தியரின் பிறந்தநாளை சித்தர் தினமாக அனுசரித்து வருகிறது.


இந்த ஆண்டு (2023), "ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற தலைப்பில் 6வது சித்தர் தினக் கொண்டாட்டத்தை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து இன்று திருச்சியில் நடைபெற்றது.



 மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திரபாய் கலுபாய், ஆயுஷ் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும்  மக்களவை உறுப்பினர் திருச்சிராப்பள்ளி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


 இந்நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பிரமோத் குமார் பதக் தலைமை தாங்கினார்


விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் ....ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக இந்திய சித்த  மருத்துவ முறைகள்  மக்களிடையே வேகமாக பரவி வருகிறது


.

 சித்த மருத்துவ பலன்களை இந்திய மக்கள் உணர தொடங்கியுள்ளனர்.

சித்த மருத்துவ முறைகளை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ் சித்த மருத்துவ நூல்கள்,ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்து  கோரிக்கை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.




Post a Comment

0 Comments