NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** பீமநகர் பாலக்காட்டு பாஞ்சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பீமநகர் பாலக்காட்டு பாஞ்சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருச்சி பீமநகர் பென்சனர் தெருவில் அமைந்திருக்கும் பாலக்காட்டு பாஞ்சாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. 

அதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. 



அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா  ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments