NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை சார்பில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


திருச்சி பீமநகர் கல்கி மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார் கோவை அய்யூப் சிறப்புரை ஆற்றினார் கல்லூரி முதல்வர் ரமீஷா அப்பாஸ் அலி, மாநிலத் துணைத் தலைவர் ரபியுதீன், மாநில பொருளாளர் பக்ருதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா, மாவட்ட செயலாளர் ஷேக் மொகிதீன், பொருளாளர் சாகின், வேலூர் நிர்வாகி பிலால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பயின்ற 40 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது






இந்த நிகழ்ச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments