BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வை இழப்பு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர்.  இந்த நாடகத்தினை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா துவங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்றது.


இத்தெருக்கூத்து  நாடகத்தில் சர்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும் விழித்திரை தொடர்பான நோய்கள், கண்புரை, மாறுகண் மற்றும் கண்ணீர் அழுத்தம் போன்ற நோய்கள் குறித்தும், இதனால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது என்பது குறித்தும் மக்களுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம்  கேகே நகர், மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம், ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்று கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் சிகிச்சைகளை குறித்தும் தெரிந்து கொண்டனர்.



இந்நிலையில்  இந்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று மாணவர்கள் நிகழ்த்தி காட்டினர்



இந்த நாடகத்தில் கலந்துகொண்ட மாணவர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு காண ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு  செய்திருந்தார்.

Post a Comment

0 Comments