// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் தானியங்கி உயிரி கலன் பயிற்சி பட்டறை

திருச்சி தேசிய கல்லூரியில் தானியங்கி உயிரி கலன் பயிற்சி பட்டறை

திருச்சி தேசிய கல்லூரியின் (தன்னாட்சி) உயிரி தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் துறையால் ஒரு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. பயோரியாக்டர் (Bioreactor/fermentor) செயல்பாடுகள், வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படைகளை உள்ளடக்கிய, பயோரியாக்டரில் தனிப்பட்ட பயிற்சியை வழங்குவதற்காக ஒரு சிறிய பணிக்குழுவிற்காக இந்த பட்டறை வடிவமைக்கப்பட்டது.


பயிலரங்கில் விரிவுரைகள், ஆய்வக விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் ஆகியவை இடம்பெற்றன.  இந்த பயிலரங்கில் உயிரியக்க செயல்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு (bioreactor control systems) அமைப்புகள் பற்றிய விரிவான புரிதலைப் பெற்றனர். 


பங்கேற்பாளர்கள் அதிநவீன முழு தானியங்கு உயிரி கலன்களுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றனர். உயிரி கலன்களுடன் தனிப்பட்ட பயிற்சி அளிக்கவேண்டி  இதில் கலந்து கொள்ள நிறைய மாணவர்கள் விண்ணப்பமளித்திருந்தும், ஒன்பது மாணவர்கள் கொண்ட சிறிய குழு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  பயிற்சி முடிந்தபின் கல்லூரியின் தேர்வு ஆணையர்  முனைவர் ஸ்ரீதர்  அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments