BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** எஸ்டிபிஐ கட்சி கொடி அகற்றம் போராட்டம் அறிவிப்பு

எஸ்டிபிஐ கட்சி கொடி அகற்றம் போராட்டம் அறிவிப்பு

 திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 11 வது வார்டு கீரை கொல்லை கிளையின் சார்பாக வைக்கப்பட்ட  S.D.P.I.‌கட்சியின் கொடியை  22/04/23  இரவு 12 மணிக்கு மேல்  S.D.P.I. மற்றும்  ம.ம. க  கட்சிக் கொடியினை பிடுங்கி சென்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை  வன்மையாக  கண்டிக்கின்ற வகையில்  நாளை திங்கள்கிழமை  உறையூரில்  சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சியை திருப்திப்படுத்த  எஸ்டிபிஐ கட்சி கொடியை அகற்றுவது ஒரு தலைபட்சமான முடிவாக உள்ளது.பாஜகவிடம்  சமரசம் செய்வதற்காக  அவர்களை திருப்தி படுத்துவதற்காக  இந்தப் பிரச்சனையில் உள்ள உண்மைத்தன்மையை  தெரிந்தும்  அதன் மீது  நடவடிக்கை எடுக்காமல்  ஏற்கனவே இருந்த கொடிக்கம்பத்தின் மீது  புகார் அளித்திருப்பது  கண்டனத்துக்குரியது.

 

உறையூர்  காவல் ஆய்வாளர்  மாநகராட்சி நிர்வாகத்திற்கு   எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லாத இடத்தில்  அதைக் காரணம் காட்டி  புகார் அளித்திருப்பது  பல சந்தேகங்களை உண்டாக்குகிறது.

காவல்  ஆய்வாளரை இயக்குவது  மாவட்ட  காவல்துறை ஆணையரா ?. அல்லது  பாரதிய ஜனதா கட்சியா ? என் கேள்வி எழுப்பியுள்ளார்...


குறிப்பிட்ட அந்த இடத்தில் சிறுபான்மையினர் அல்லாத  கட்சிகளின்  கொடிகள் இருந்திருந்தால்  காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்து இருக்குமா ?காவல்துறையும்,திருச்சி  மாநகராட்சி நிர்வாகமும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு நீதி பாஜகவுக்கு ஒரு  நீதியை கையாளுகிறதா ?இத்தகைய  அடக்குமுறை   போக்கினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது..மீண்டும் அதே இடத்தில்  கட்சியின் கொடிக்கம்பத்தை  வைப்பதே  தீர்வாகும் 

திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில்  பாஜகவின் கொடிக்கம்பத்தை  வைத்து  சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும்  சமூக விரோதச் செயலை  தொடங்கியவர்களை  காவல்துறை கைது செய்ய  வேண்டுமென  மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments