உங்கள் தோழன் அறக்கட்டளை மற்றும் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பென்ஷனர் தெரு பள்ளிவாசல் நிர்வாகம் இணைந்து நடத்திய சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி தஞ்சை மண்டல பேராயர் சந்திரசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை திருச்சி மாவட்ட செயலாளர் இனாமுல் ஹசன், மாநில பொருளாளர் முகமது மீரான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், மதரஸா மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments