NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி அப்போலோ மருத்துவர்கள் சாதனை

முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி அப்போலோ மருத்துவர்கள் சாதனை

 திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டாக்டர் செந்தூரன் கூறுகையில், 87 வயது முதியவருக்கு வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகள் ஏற்படத்தொடங்கியது குறிப்பாக மலச்சிக்கல் மேலும் இவருக்கு நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொந்தரவுகள் இருந்தது.


இவற்றிக்கு தொடர் சிகிச்சையில் இருந்ததுடன் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தார்.   அப்போலோ மருத்துவமனையில் இவர் இலியோகோலோனோஸ்கோப்பிக்கு உட்படுத்தப்பட்டார்.


இதன் முடிவு இவருக்கு பெருங்குடல் பகுதியில் பெரிய கட்டியை வெளிப்படுத்தியது,  இக்கட்டியானது புற்றுநோயா என ஆராய நரோவ் பாண்ட் இமேஜ் (NBI - Narrow Band Image) என்ற முறையில் பரிசோதனை செய்ததுடன் பயாப்ஸி என்ற திசு பரிசோதனை செய்து ஆராயப்பட்டது.ஏனைய பரிசோதனை முடிவுகள் இவருக்கு இருந்தது புற்றுநோய் கட்டி என வெளிப்படுத்தின. எனவே இதனை அகற்றப்படவேண்டியது அவசியம்.  


இவருக்கு பெருங்குடலில் இருக்கும் கட்டி மற்றும் சிலப்பகுதிகளை பாரம்பரிய அறுவைசிகிச்சை மூலம் எடுப்பதில் இவரின் நீரழிவு, இவரின் உயர்த்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொந்தரவுகள் சிக்கல்களை உருவாக்கலாம் மேலும் வயது மூப்பு மற்றும் உடல்நிலை ஜெனரல் அனஸ்தீஸியா எனும் மயக்க மருந்துக்களை கிரஹிக்கும் தன்மை இல்லாததினால் அறுவைசிகிச்சை இவரின் உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கலாம். 




வெகுசிலரால் கையாளப்படும் சிகிச்சை முறைகளான POEM (பெர் ஒரல் எண்டோஸ்கோப்பிக் மயோடோமி), ESD (எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன்)    STER (ஷப்மியூகோஸல் ட்னலிங் எண்டோஸ்கோப்பிக் ரீசேக்ஷன்) போன்ற ஏனைய சிகிச்சை முறைகளை திறன்பட கையாண்டு ESD - எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன் சிகிச்சையை ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி கொண்டு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.


இன்டராவேனோஸ் செடேஷன் எனப்படும் (IV Sedation) நரம்பு வழியாக மயக்கமருந்தை செலுத்தி தமிழகத்தில் முதல் முறையாக முதியவருக்கு பெருங்குடல் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மறுநாளே இவரை நடைமுறை வாழ்க்கைக்கு சென்றார். 




திருச்சி  அப்போலோ சிறப்பு மருத்துவமனை தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டத்தில் இதுபோன்ற முதல்முறை சிகிச்சை முறைகளை அறிமுகம் செய்வதற்கு உள்ளடக்கிய உலகத்தர கட்டமைப்பு மற்றும் மருத்துவ குழுவினர்கள் உள்ளடக்கியது என கூறியதுடன் ஏனைய அவசர சிகிச்சைகளுக்கு நொடிப்பொழுதில்  சிகிச்சை அளிக்கப்பெற்றது.

இம்மருத்துவமனை மேலும் அப்போலோ மருத்துவமனை பொதுமக்கள் பயனுக்காக விரைவில் திருச்சி தில்லைநகரில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக புதிய கிளினிக் திறக்க இருப்பதாக தெரிவித்தார். 



மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம் கூறுகையில் சிக்கல் மற்றும் சவாலான சிகிச்சைகளை மிக துல்லியமாக திறம்பட சிகிச்சையளிக்க திறன்வாய்ந்த மருத்துவ குழுவினர்கள் உள்ளது.

எண்டோஸ்கோப்பிக்  சப்மியூகோசல் டிசெக்ஷன் என்றால் என்ன:

எண்டோஸ்கோப்பிக் சப்மியூகோசல் டிஸ்செக்ஷன் (ESD) என்பது, இரைப்பை குடல் (ஜிஐ) பாதையில் உள்ள புற்றுநோய்க்கு  முந்தைய மற்றும் புற்றுநோய் பகுதிகளை அகற்றுவதற்கு எண்டோஸ்கோப் எனப்படும் நெகிழ்வான, குழாய் போன்ற கருவியைப் பயன்படுத்தும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையாகும்.


"சப்மியூகோசல்" என்பது குடலிலுள்ள உட்புற தசை திசுக்கள் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளுக்கிடையில் அமைந்துள்ள கட்டிகளுக்கான சிகிச்சை, இந்த கட்டிகள் தசை திசு மற்றும் உடலின் உள்ளுறுப்புகளுக்கிடையில் நெருக்கமாக அமைந்துள்ள காரணத்தால் இதனை வேறு முறைகளில் அகற்றுவது கடினமாகும். 

இரைப்பைக் குடலியல் எண்டோஸ்கோப்பிக் நிபுணர்கள் குடல் மற்றும் வயிற்று பாதைக்கு சிகிச்சையளிப்பதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இப்பாதையில் கட்டி அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து மருத்துவர் எண்டோஸ்கோப்பை குடலின் மேல்புறத்தில் இருந்தால்  வாய் வழியாக அல்லது கீழ்ப்புறத்தில் இருந்தால் ஆசனவாய் வழியாகச் செலுத்தி சிகிச்சை அளிப்பர்.


இதன் சிறப்பு  வெளிநோயாளி முறையிலேயே இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பதேயாகும்.

இந்தியாவில் ஒரு சில மையங்கள் மட்டுமே  ESD - எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன் சிகிச்சை அளிக்கப்படுகிறது,


ஏனெனில் இந்த செயல்முறைக்கு அதிக அளவு நிபுணத்துவம் மற்றும் துல்லியம் தேவைப்படுகிறது. திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரான Dr.SNK செந்தூரன்  இது போன்ற சவாலான மற்றும் புதிய சிகிச்சை முறைகளில் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் டிசெக்ஷன் யாருக்கு தேவைப்படலாம்?

சப்மியூகோசாவை உள்ளடக்கிய பின்வரும் கட்டிகள் மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிக்க ESD - எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன் செயல்முறை பயன்படுத்தப்படலாம் மேலும்  உணவுக்குழாய், பெருங்குடல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட ஆரம்ப நிலை புற்றுநோய் கட்டிகள் அல்லது பெருங்குடல் பாலிப்கள் மற்றும் உணவுக்குழாய், வயிறு அல்லது பெருங்குடலின் கட்டிகள் இன்னும் GI சுவரின் ஆழமான அடுக்கில் இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம்.


இத்தகைய புண்களுக்கு அறுவை சிகிச்சையை விட ESD - எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எண்டோஸ்கோபிக் முறைகளால் எளிதாக அகற்ற முடியாத அளவுக்கு பெரிய கட்டிகளை இந்நவீன சிகிச்சை முறையை பயன்படுத்தி அகற்றி புற்றுநோய் பரவுதல், நோயுற்ற தன்மை மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றார்.


மயக்கவியல் மருத்துவர்கள் சரவணன், அழகப்பன், மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் மற்றும் நிர்வாகி  சாமுவேல், 

மருத்துவமனை நிர்வாக பொது மேலாளர் சங்கீத், விற்பனை பிரிவு மூத்த மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments