// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** உத்தரகாண்டில் இஸ்லாமியர் மீது தாக்குதலை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்டில் இஸ்லாமியர் மீது தாக்குதலை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்

 உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் மீது தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.



திருச்சி மாநகர் மாவட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்  தலைமையில் நடைபெற்றது.கண்டன உரையை அகில இந்திய முஸ்லிம் லீக் மாநில தலைவர் காஜா மொய்தீன்,மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரகாண்ட், உத்தரகாசி ப்ரோல உள்ளிட்ட பகுதிகளில் லவ் ஜிகாத் என்ற போலி வதந்தியால் இஸ்லாம்  மக்களுடைய வீடுகள், கடைகள்,  இஸ்லாமிய மக்களை ஊரை விட்டு விரட்டிக் கொண்டு இருப்பதை   கண்டித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்திட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உசேன் ஷெரிப், ராஜாமுகமது,ஷேக் அப்துல்லா, காஜா மொகிதீன்,  உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



 

Post a Comment

0 Comments