// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்வு!...IUML- இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மு.மைதீன் அப்துல் காதர் அழைப்பு

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்வு!...IUML- இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மு.மைதீன் அப்துல் காதர் அழைப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மு. மைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் டெல்லியில் நீதி கேட்டு போராடிவரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும்,மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிட்ஜ் பூஷன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்திய நாட்டின் குடியரசுத் தலைவருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்வு இளைஞர் அணி மாவட்ட தலைவர் பா. அஜீம் அவர்களின் தலைமையில் இன்று(10/06/2023) சனிக்கிழமை மாலை 04:00 மணி அளவில் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.


இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட நிர்வாகிகள்,பிரைமரி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.


உலக அரங்கில் இந்தியாவின் கோபுர பெருமையை நிலை நாட்டிய வீரர்களுக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments