NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** SDPI கட்சி மக்கள் அரசியல் 15 ஆம் ஆண்டு விழா

SDPI கட்சி மக்கள் அரசியல் 15 ஆம் ஆண்டு விழா

 SDPI கட்சியின் மக்கள் அரசியலின் 15 ஆம் ஆண்டு உதய தினத்தினை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம்  சார்பாக கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட பொது செயலாளர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


மாவட்ட துணைத் தலைவர்  S.பிச்சைக் கனி அவர்கள் SDPI கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.SDPI கட்சியின் மாவட்ட தலைவர் K. முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் உதய தின சிறப்புரையாற்றினார்.


பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வை மாவட்ட செயலாளர் தளபதி.அப்பாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.




இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், SDTU மாநில செயலாளர் முகம்மது ரபீக்,SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா,SDTU நிர்வாகிகள்,தொகுதி,அணி,கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


Post a Comment

0 Comments