NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து மாநகராட்சி மேயர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து மாநகராட்சி மேயர் ஆய்வு

ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரியமங்கலம் குப்பை கிடங்கு 47.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது.திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது.



அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் கடந்த மூன்று ஆண்டுகளாக தீ விபத்துகள் பெரியளவு நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று மதியம் திடீரென  குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தற்பொழுது மாநகராட்சி பணியாளா்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை ரூ. 80 கோடியில் தனியாா் மையங்கள் மூலம் மறு சுழற்சி செய்யும் பணிகள் நடைபெறும் நிலையில், கடந்த சில மாதங்களாக கிடங்குக்கு குப்பைகள் வரத்து அதிகரிப்பால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது

மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆணையர் வைத்திநாதன்  நகர பொறியாளர், நிர்வாக பொறியாளர்,  சுகாதார அலுவலர்கள், 
எஸ் ஆர் வேதா யுனைட்டெட் இன்ஃப்ரா டெவெலப்பர்ஸ்  குழும மண்டல மேலாளர் மற்றும் வார்டு மேலாளர்கள் ஆகியோர் குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் 

Post a Comment

0 Comments