NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** நடிகர் சின்னி ஜெயந்த் உடன் சமூக நல அமைப்புகள் சந்திப்பு

நடிகர் சின்னி ஜெயந்த் உடன் சமூக நல அமைப்புகள் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருச்சி வழியாக சென்னை செல்ல திருச்சி விமான நிலையத்திற்க்கு வருகை புரிந்த பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகரும் திரைப்பட இயக்குனருமான சின்னி ஜெய்ந்த் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்த்தித்தனர்..


திரைப்பட துறையில் பன்முக திறமை கொண்டவர் பிரபல நடிகரான சின்னி ஜெயந்த் அவர்கள் இவர் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் பிரபு தளபதி விஜய் விக்ரம் மாதவன் பிரபு தேவா உள்ளிட்ட பிரபல திரைப்பட நடிகர்களுடன் பல படங்களில் வில்லன் குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் அதுமட்டுமின்றி சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்...



இவர் பல பிரபலங்களின்  குரலில் (பல குரல் மிமிக்ரி கலைஞர்) பேசும் திறமை கொண்டவர் பாடகர் இப்படி திரைப்பட துறையில் பல திறமைகளை வெளிபடுத்தி வருகிறார் சென்னை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் அவரை  சமூக ஆர்வலர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் Dr. P. சங்கர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா இணைசெயலாளர் அல்லிகொடி மற்றும் மணிவேல் அண்ணாதுரை ஆல்பர்ட் ரூபன் விக்னேஷ் குமரேசன் தினகரன் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்...









 சந்திப்பில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் 3ம் இடத்தை பெற்ற அச்சம்தவிர் குறும்படம் குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துக்களை மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments