NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி அருணா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கூட்டுறவு மினி ஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் அன்புச்செல்வி வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார் மாநில இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன் செல்வம் ரமேஷ் பிரபு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ராஜா ராம பாண்டியன் மாநில பொதுச் செயலாளர் செல்வமணி மாநில பொருளாளர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.


இந்த கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இ எஸ் ஐ மருந்தகம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகின்ற மருந்து கிடங்கு அலுவலர்கள் தலைமை மருந்த ஆளுநர்கள் உள்ளிட்ட இந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments