// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் பழமைவாய்ந்த தர்கா மற்றும் அடக்கஸ்தலம் இடிப்பு

திருச்சியில் பழமைவாய்ந்த தர்கா மற்றும் அடக்கஸ்தலம் இடிப்பு

 திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே, அனார் பாக் தர்கா மற்றும் கபர்ஸ்தானை இன்று அதிகாலை மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.


அதையடுத்து அப்பகுதியில் உள்ள முஸ்லீம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர்கள் கென்னடி, நிவேதிதா லெட்சுமி மற்றும் தில்லை நகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அனைவரும் போராட்ட முடிவை கைவிட்டனர்.



அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மூன்று நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.



இச்சம்பவத்தால் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

Post a Comment

0 Comments