NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர்கள்,நிர்வாகிகள் பங்கேற்பு



பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து அரசு துறைகளிலும் தலை விரித்தாடும் ஊழல் ஆகியவற்றை கண்டித்தும் இவற்றை கண்டு காணாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும்,

 



தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் மாநகர், வடக்கு,தெற்கு, மாவட்ட அதிமுக சார்பில் மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் தலைமை கழக பேச்சாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,எம்.ஜி.

ஆர்.இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி,எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர்கள்சீனிவாசன்.பொன் செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், அவைத்தலைவர் அய்யப்பன்,ஆவின் சேர்மன் மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி, மல்லிகா சின்னசாமி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 


Post a Comment

0 Comments