NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** மக்கள் உரிமை கூட்டணி நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மக்கள் உரிமை கூட்டணி நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் மக்கள் உரிமை கூட்டணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் மக்கள் உரிமைக்கூட்டணி அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் பல பொது நல வழக்குகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தார் அந்த வகையில் திருச்சி நத்தமாடிப்பட்டியில் உள்ள ஒரு அரசு நிலத்தை மீட்பதற்கு புகார் மனு அளித்துள்ளர் இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகளால் அவர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் பத்தாயிரம் பணமும் பறிக்கப்பட்டுள்ளது...


தற்போது தாக்கப்பட்ட ஜோசப் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவே தாக்கப்பட்ட சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம்  தெரிவித்துள்ளார் 


மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments