NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

 திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இலவச செவித்திறன் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 





திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் இளைஞர் குழு மற்றும் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் திருச்சி மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் விக்டர் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.

Post a Comment

0 Comments