BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** மது ஒழிப்பு மக்கள் படை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மது ஒழிப்பு மக்கள் படை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிலமற்ற விவசாயிகள் பயன்பெற தக்க வகையில் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 1959-ம் ஆண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் அமைக்கப்பட்டது, 1960-ம் ஆண்டு சென்னை தங்க சாலையில் திரைப்பட நகரம் தொடங்கப்பட்டது. கல்விக்கான எத்தனையோ மகத்தான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டு மக்களை அறிவுக்கடலில் திளைக்க வைத்தது. 



கர்மவீரர் கல்வி தந்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை ஒட்டி , மது  ஒழிப்பு மக்கள் படை நிறுவன ஆனந்த் வி.எஸ். .ஆர்  ஆனந்த் அவர்கள் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தமிழக அரசு கூடிய விரைவில் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் குறிப்பாக நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள லீயோ படத்தில் வரும் பாடல் வரிகளில் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் விதமாக உள்ளது அதனை படக்குழுவினர் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Post a Comment

0 Comments