NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்

ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு  மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி  மாணவர்கள்,பெருவை பொது சேவை,இயற்கை ஆர்வலர் ராமராஜ்.


பெருவெள்ளநல்லூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 98 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்த முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும்  இணைந்து கடந்த 2016 ம் ஆண்டு பெருவை பொது சேவை என்னும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.இந்த பொது சேவையின் ஒருங்கிணைப்பாளராக இயற்கை ஆர்வலர் ராமராஜ் மற்றும் முண்ணால் மாணவர்களுடன் இணைந்து தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை உள்ளிட்ட  அனைத்து வசதிகளும் செய்து வருகின்றனர். 



கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு கிராமத்தைச் சுற்றியும் பனை, புளியமரம், புங்கன், தேக்கு, நாவல், இலுப்பை, அரசன் உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் என 5 லட்சம் மரக்கன்றுகளை இயற்கை ஆர்வலர் ராமராஜ் தனது சொந்த நிதியில் நட்டு வைத்தார்.அதன் ஒரு பகுதியாக கிராமத்தில் உள்ள மயானத்திற்கு தேவையான மயான காத்திருப்பு கொட்டகை,தண்ணீர் தொட்டி,மயான எரிமேடை பராமரிப்பு என ரூ. 3 லட்சம் மதிப்பில் முன்னால் மாணவர்கள், பெருவை பொது சேவை மற்றும் இயற்கை ஆர்வலர் ராமராஜ்  நிதி பங்களிப்புடன் அமைத்துக் கொடுத்தனர். இந்த  மயான கொட்டையை பெருவளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கிரிவாசன் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.


பொது சேவை என்னும் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் அனைத்து சமுதாயப் பணிகளும் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களிடமும் முறையாக  அனுமதி பெற்று செய்து  வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments