NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி ஆகாஷ் பைஜூவின் ANTHE 2023- தேசிய திறன் தேடல் தேர்வு அக்டோபரில் நடைபெற உள்ளது – தலைமை நிர்வாகி பிரதீப் பேட்டி

திருச்சி ஆகாஷ் பைஜூவின் ANTHE 2023- தேசிய திறன் தேடல் தேர்வு அக்டோபரில் நடைபெற உள்ளது – தலைமை நிர்வாகி பிரதீப் பேட்டி

 ஆகாஷ் பைஜூ நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது இதில் பயிலும் மாணவர்களுக்கு வருடம் தோறும் anthe எனப்படும் ஸ்காலர்ஷிப் தேர்வு நடத்தி வருகிறது இதில் ஏழு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 700 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 100% வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் இந்த தேர்வானது 14 ஆண்டாக இந்த வருடம் அக்டோபர் 7 முதல் 15 தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் NEET, JEE, CET, NTSE , ஒலிம்பியாஸ்ட் போன்ற போட்டி தேர்வு பயிற்சிக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்


இந்த தேர்வானது ஆன்லைன் off line என இரு வழிகளில் நடத்தப்படுகிறது ஆன்லைன் தேர்வு அக்டோபர் 7 முதல் 15 வரை காலை 10 முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் ஆஃப் லைன் தேர்வு ஆகாஷ் பிஜு தேர்வு மையத்தில் அக்டோபர் 7 முதல் 15 வரை காலை 10.30 முதல் 11.30 மணி வரை மாலை 4 முதல் 5 மணி வரை என இரு வேளைகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 90 மதிப்பெண்களுக்கு 40 கேள்விகள் கேட்கப்படும் வகுப்பு வாரியாக கேள்விகள் கேட்கப்படும் பங்குபெற விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு 3 நாட்களுக்கு முன்பு படிவத்து சமர்ப்பிக்க வேண்டும் ஆஃப் லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு 7 நாட்களுக்கு முன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்


இதன் முடிவு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 27 அன்றும், 7 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 3 தேதி அன்றும், 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது உதவி இயக்குநர் ராகவேந்திரன், துணை இயக்குனர் சஞ்சய் காந்தி, திருச்சி தஞ்சை கிளை தலைமை நிர்வாகி சக்தி கணேஷ் மற்றும் கிளை தலைவர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தன

Post a Comment

0 Comments