// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின பொதுக்கூட்டம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின பொதுக்கூட்டம்

 யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், பீமநகர் கிளை சார்பாக 76 ஆம் ஆண்டு சுதந்திர தின பொதுக்கூட்டம் UTJ தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் கிளை தலைவர் K.M.அன்சாரி தலைமையில், கிளை செயலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் கிளை பொருளாளர் சேக் அப்துல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் சீமானுக்கும். பாஜகவுக்கும் எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் உரையுடன், சிறப்பு அழைப்பாளாராக மூத்த ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல், மாநில செயலாளர் அப்பாஸ்அலி, மாநில பொருளாளர் பக்ருதீன், மாநில துணை தலைவர் ரஃபியுதீன், மாவட்ட தலைவர் ராயல் சாதிக், மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் ஷாஹீன், மாவட்ட துணை தலைவர் சதக்கத்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் இனாம்குளத்தூர் சாகுல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் பேச்சு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments