// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி கல்லூரி மாணவர்கள் பேரணி

விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி கல்லூரி மாணவர்கள் பேரணி

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் சார்பாக சந்திராயன் மூன்று செயற்கைக் கோளை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கிய விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டும் விதமாக வாழ்த்து பேரணி நடைபெற்றது.


 கல்லூரி முதல்வர் முனைவர் கி குமார் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்து சிறப்பித்தார். தேசியக் கல்லூரி வளாகத்தில் இருந்து ரயில்வே நிலையம் வரை சென்ற பேரணியானது மீண்டும் தேசியக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. 



தேசிய மாணவர் படை மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்கள் சுழற்சங்க மாணவர்கள்  உள்ளிட்ட 500 மாணவ மாணவிகள் இப்பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் பேரணியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் முனைவர் இளவரசு மற்றும் பேராசிரியர்கள் பேரணியில் திரளாக பங்கேற்று விஞ்ஞானிகளின் சாதனைகளை போற்றினர்.

 நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments