// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தேசிய விளையாட்டு தினத்தையொட்டி மாரத்தான் போட்டி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி மாரத்தான் போட்டி

தேசிய விளையாட்டு தினம் (ஆகஸ்ட் 29) அதை முன்னிட்டு நேற்று மாராத்தான் ஓட்டப்போட்டி  அரசு தலைமை மருத்துவமனை அருகில் இருந்து துவங்கியது. 


திருச்சி காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு அவர்கள் கொடி  அசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 






இறுதியில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த( நான்கு கிலோமீட்டர் ) முதல் 15 மாணவர்களுக்கும், முதல் 15 மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயங்களை பள்ளி முதல்வர் அவர்கள் வழங்கினார். ஓடிய அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.. இப் போட்டி  அமிர்த வித்யாலயம் உடற்கல்வித்துறையின் சார்பாக இரண்டாம் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments