NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில்  நடைபெற்றது.


மமக மாவட்ட செயலாளர் அசரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் தமுமுக 29 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் படியும்,கல்வி உதவி,விளையாட்டு போட்டி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.



மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை‌ தலைவர் சையது  அணி நிர்வாகிகள் பகுதி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றனர்.

Post a Comment

0 Comments