தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டத்தை வெற்றியடைய உழைத்திட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துக் கொண்டார்.
திருச்சி பாலக்கரையில் கடந்த 26 ஆம் தேதி சனிக்கிழமை தமஜக திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மத வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
.

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சிவ திரு திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள் அருட்பணி பாதர்.எஸ்.லூர்துசாமி அவர்கள் விடுதலை தமிழ் புழிகள் கட்சியினுடைய தலைவர் குடந்தை அரசன் அவர்கள் தேவேந்திர குல மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் அவர்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தஞ்சை மண்டல செயலாளர் சதா சிவகுமார் அவர்கள்
தமஜக ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் பாலக்கரை ஜாகிர் சரிப் அவர்கள்.இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்கள்.
கூட்டத்திற்கு முன்னதாக கட்சியின் தலைவர் கே எம் செரிப் அவர்களை வரவேற்க தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆட்டோ பேரணியாக சென்று வரவேற்றனர். ஆட்டோ பேரணியை தொழிற்சங்க மாநில தலைவர் சண்முகராஜா கொடியசைத்து துவங்கி வைத்தார். பின்பு மாவட்ட இளைஞரணி மற்றும் பழனிபாபா பேரவையின் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது நிகழ்வினை மாவட்ட இளைஞரணி செயலாளர் சேர்கான் பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் கே டி எஸ் பீர்முஹம்மது ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அனைத்து தலைவர்களுக்கும்.
பொதுக்கூட்ட பணியாற்றிய தமஜக மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும். மாவட்ட இளைஞரணி வர்த்தகர அணி ஆட்டோ தொழிற்சங்கம் மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் பகுதி பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக உழைத்திட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும். பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும்.பல்வேறு வகையில் உதவி புரிந்த அத்தனை நபர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
0 Comments