BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசிய கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு பயிலரங்கம்

திருச்சி தேசிய கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு பயிலரங்கம்

 திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையில் சார்பில் "மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் தமிழ்ப்பெருமிதம் வாசிப்பில் பங்கேற்ற முதுகலை இரண்டாமாண்டு மாணவி சி.அபிராபி தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் உடல் மற்றும் உயிரைப் பேணிக்காக்கும் என்று கூறினார். இளங்கலை முதலாமாண்டு மாணவி சரண்யா தமிழ்மொழியை நாம் பிரியோர் இல்லை" என்று சிறப்பான முறையில் பேசினார் இவை போன்று பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்களும் தமிழ்ப் பெருமிதம் வாசிப்பில் கலந்து கொண்டனர் "மாவட்ட அலுவலர்களின் திட்ட விளக்கம்" என்பதில் திருமிகு மகாராணி (இணை இயக்குநர் வேலைவாய்ப்பு) அவர்கள் மாணவ மாணவியர்கள் இளம் வயதிலேயே போட்டித்தேர்வு இலவசப் பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வு எழுதி வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளாக எங்கெங்குப் பயிற்சி மையம் இருக்கிறதென்றும், எதிர்காலப் பயனையும் மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்.


பாஸ்கரன் (திறன் மேம்பாட்டு இயக்குநர்) அவர்கள் அலட்சியம், ஏமாற்றம் என்பனவற்றிலுள்ள முதல் எழுத்தை நீக்கினால் லட்சியம், மாற்றம் என்று வரும். அதனையே மாணவர்களாகிய நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்று கூறினார். திரு.சிவக்குமார் மாவட்ட நூலகர்) அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலானது புத்தகமே என்றும் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டியாகப் புத்தகம் இருப்பதையும் எடுக்காட்டுகளுடன் விளக்கினார்.



கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் அவர்கள் முன்னோர்கள் அறிவியலிலும், கலைகளிலும் திறன்பெற்றவர்களாக விளங்கியதை மாணவர்களுக்கு நோக்கவுரையில் எடுத்துரைத்தார். தமிழ்நாடு நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றிய திருமிகு பீட்டர் அல்போன்ஸ் (தலைவர் சிறுபான்மையினர் ஆணையம்) அவர்கள் மாணவர்கள் தேர்விற்கு முன் பாடத்தைக் கற்றுக் கொள்வதுபோல தேர்விற்குப் பின் வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுக் கொள்கின்றனர் என்றும் வரலாறு தெரியாத சமூகமும், நிகழ்காலத்தைப் புரியாத சமூகமும். எதிர்காலத்தைத் திட்டமிடாத சமூகமும் முன்னேற்றமடையாது" என்ற கருத்தையும் இளம் வயதில் விதவை ஆவதையும் பழங்காலத்தில் குழந்தை மணம் என்ற கொடுமை நிகழ்ந்ததையும் அதை எதிர்த்து முத்துலெட்சுமி அம்மையார் போராடியதையும், பெண்களுக்குச் சொத்துரிமை திட்டத்தைக் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்ததையும், தமிழ்ப் காப்பிய பெருமைகளையும் மிகச் சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றினார். அதனைத் தொடர்ந்து நாயகி, நாயகன் கேள்வி பதில் பகுதியும், மாணவ, மாணவியர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கான நன்றியைத் தமிழ்த்துறை தலைவர் மற்றும் கலைப்புல முதன்மையர் முனைவர் ந.மாணிக்கம் அவர்கள் வழங்கினார் மாவட்ட நிர்வாகமும், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்விற்குத் தேசியக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா.இராஜா ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments