// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது

 திருச்சி மாநகர் மேலபுதூர் பகுதியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக டாக்டர் ஜோசப் ஞானதிக்கம் அவர்களின் நினைவாக 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 


மேலும் நடந்தோறும் சிறந்த சேவை மற்றும் சமூகப் பணியாற்றிய நபருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான விருதினை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜா கோவிந்தசாமி கலந்துகொண்டு சிறந்த பேராசிரியர்களுக்கு விருதினை வழங்கினார். 



இந்நிகழ்வில் ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments