தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் திருச்சியில் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா தலைமையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பேரமைப்பு அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ரஹீம் முன்னிலையில் பீமநகர் NMR பிரியாணி கடை உரிமையாளர் ரகுமான் தலைமையில் அப்துல்லா, சேட்டு, இப்ராஹிம் , பாபு, சரவணன், மணி சந்தோஷ், மொய்தீன், உட்பட 30க்கும் மேற்பட்டோர் தங்களை இணைந்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பொன்னாடை போர்த்தி அவர்களை பேரமைப்பில் இணைத்துக் கொண்டார்.இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் திருமா, யாசர், பவன், ஜமால், அப்பாதுரை உடன் இருந்தனர்.





0 Comments