// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சியில் இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்வு மஜக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்பு .!!

திருச்சியில் இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்வு மஜக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்பு .!!

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி வையம்பட்டி ஒன்றியம் சார்பில் இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்வானது ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஒன்றிய செயலாளர் அப்துல் காலிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் அணி சார்பில் திருச்சி ஷரிப் மற்றும் மாநில இளைஞர் அணி பொருளாளர் பெரம்பலூர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



அதனைத் தொடர்ந்து மஜக இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்தும், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நாம் அரசியல் அறிவு பெற்ற ஆளுமைகளாக உருவாவதின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வை மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.இதில் மஜக மாநில, மண்டலம் மற்றும் மாவட்டத் துணை, அணி , ஒன்றிய நிர்வாகிகள், உள்ளிட்ட ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments