// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** லயன்ஸ் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி

லயன்ஸ் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கம் சார்பில் லயன்ஸ் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க செயலர் துவக்க உரையாற்றினார். இயற்கை மருத்துவர் கௌதம்,பொறியாளர் விக்னேஷ், ராகவேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ஹேமலதா லயன்ஸ் சங்க செயல்பாடு மற்றும் திட்டங்கள் குறித்து பேசுகையில், லயன்ஸ் இன்டர்நேஷனல் சேவை அணுகு முறையில் பார்வை, நீரிழிவு, பசி, சுற்றுச்சூழல், குழந்தைப் புற்றுநோய், பேரிடர் நிவாரணம், மனிதநேயம், இளைஞர் நலம் ஆகியவை முக்கிய சேவைத் திட்டங்களாக உள்ளன.

கண் நலன் மற்றும் பார்வை பாதுகாப்பு திட்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்,பள்ளி மாணவர்களுக்கான பார்வை பரிசோதனைதேவையுள்ளவர்களுக்கு கண் கண்ணாடி வழங்குதல்,கண் தானம், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி, பார்வை பரிசோதனை இடம் பெறுகின்றன.2026-2027 ஆண்டு மாவட்ட ஆளுநர் பெரிதினும் பெரிது கேள் இலக்குகளை சிறப்பாக செயல்படுத்துவோம். நீரிழிவு நோய் விழிப்புணர்வு திட்டத்தில்,நீரிழிவு பரிசோதனை முகாம்,சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி விழிப்புணர்வு, யோகா மற்றும் நடைப்பயிற்சி நிகழ்ச்சிகள், நீரிழிவு நோயாளிகளுக்கான ஆதரவு நிகழ்ச்சிகள்,நீரிழிவு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுக்கான திட்டங்கள் உள்ளன.சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடுதல்,பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல்,மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்தல்,பிளாஸ்டிக் குறைப்பு விழிப்புணர்வு,நீர்நிலைகள் மற்றும் பொதுஇடங்களைத் தூய்மைப்படுத்துதல்,மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு,பள்ளி மாணவர்களுடன் சுற்றுச்சூழல் பணிகள் போன்றவை உள்ளன. பசி ஒழிப்பு திட்டத்தில்

அன்னதானம்,ஏழை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுஉணவுப் பொருட்கள் வழங்கல், தேவையுள்ள குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்குதல்,

முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல்,பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் உள்ளன.குழந்தைகள் நலன் திட்டத்தில் 

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி,

கல்வி உபகரணங்கள் வழங்குதல்,பள்ளி மாணவர்களுக்கான சுகாதார முகாம்,

குழந்தைப் புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற திட்டங்கள் உள்ளன. பேரிடர் நிவாரணப் பணிகள் திட்டத்தில் 

வெள்ளம், புயல், தீ விபத்து போன்ற பேரிடர்களின் போதுஉணவு வழங்குதல்,

உடைகள் வழங்குதல்அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல்,மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்குதல்,

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி,பேரிடர் நிவாரணத்திற்கு அவசர உதவி திட்டங்கள் உள்ளன.முதியோர் மற்றும் ஆதரவற்றோர் சேவை திட்டத்தில்,

முதியோர் இல்லங்களுக்கு உதவி,

ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் மருத்துவ உதவி, தேவையுள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்,தனிமையில் வாழும் முதியோருக்கு சமூக ஆதரவு அளிக்கும் திட்டம் உள்ளன.கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு திட்டத்தில்,இலவச நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல்,

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குதல்,போட்டித் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்,

கல்வி விழிப்புணர்வு முகாம்,

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்,லியோ சங்கம் மூலம் இளைஞர்களை சமூகப்பணியில் ஈடுபடுத்துதல்,இளைஞர்களை சமூக சேவையிலும் தலைமைத்துவத்திலும் ஈடுபடுத்துவது லயன்ஸ் சங்க முக்கிய சேவை நோக்கங்களில் ஒன்றாகும். சுகாதார சேவை திட்டத்தில் இரத்த தான முகாம்,பொது மருத்துவ முகாம்,பெண்கள் நல விழிப்புணர்வு,குழந்தைகள் நல பரிசோதனை,ஊட்டச்சத்து விழிப்புணர்வு, மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளன.சாலை பாதுகாப்பு திட்டத்தில்ஹெல்மெட் விழிப்புணர்வு,சீட் பெல்ட் விழிப்புணர்வு, பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்புப் பயிற்சி,பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்குதல்,சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெறுகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலன் திட்டங்களில்

உதவி உபகரணங்கள் வழங்குதல்,

கல்வி உதவி,திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்,வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்

தேவையான மருத்துவ உதவிகளுக்கு இணைப்பு ஏற்படுத்துதல் இடம் பெறுகின்றன.பெண்கள் நலன் திட்டத்தில்

ஏழை பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல்,தையல் இயந்திரம் போன்ற வாழ்வாதார உதவி வழங்குதல்,

பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு,

சுயதொழில் பயிற்சி,குடும்ப நல விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளன.

பாரம்பரியம் மற்றும் தமிழ் பண்பாடு திட்டங்களில்பழங்கால புழங்கு பொருட்கள் விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளன. வாழ்வாதாரத் திட்டங்களில்ஏழைக் குடும்பங்களுக்கு ஆடு வழங்கும் வாழ்வாதார உதவி,சிறு தொழில் தொடங்க உதவி,விவசாயிகளுக்கு தேவையான உதவிகள்,இயற்கை விவசாய விழிப்புணர்வு உள்ளன. ஒவ்வொரு மாதமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து

உணவுப் பொருட்கள் கல்வி உதவி

மருத்துவ உதவி,வாழ்வாதார உதவி

என தேவைக்கேற்ப உதவலாம் என்றார்.

Post a Comment

0 Comments