// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சியில் 80 வது இந்திய சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடுவோம் மஜக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு .!!

திருச்சியில் 80 வது இந்திய சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடுவோம் மஜக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு .!!

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர், மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பாபு  தலைமையில் பாலக்கரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தர்வேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 

அதனைத் தொடர்ந்து மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி எம்.முகமது ஷரிப்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோக்க உரை நிகழ்த்தினார். 


முன்னதாக மாவட்ட சீரமைப்புக்கு பிறகு புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

1. இந்திய தேசத்தின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மஜக வின் கிளைகளில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது .

2. பகுதி வாரியாக; நிர்வாகிகளை நியமித்து நிர்வாகத்தை முழுமை அடையச் செய்வது.



3. முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்படும் வக்பு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை நிலங்களை மீட்கும் முயற்சியில் கவனம் செலுத்திட மீட்பு குழு அமைத்து துறை சார் அதிகாரிகளை சந்திப்பது. 

4. ஆகஸ்ட் 16 திருச்சிக்கு வருகை தரும் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA உற்சாக வரவேற்பளிப்பது.


உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை QR ஸ்கேனர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்ற பின் கூட்டம் நிறைவேறியது. 


இதில் மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் ஜமால், மாவட்டத் துணைச் செயலாளர் அப்பாஸ், ஹபீப் ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments