தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜர் பாகவதரின் ஜெயந்தி விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் தக்கலை நடராஜன், பொதிகை பாலு, திருச்சி சுகுமார், திருவெறும்பூர் எழில், ஸ்ரீதரன், பெல் ராஜா உட்பட மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ் கூறுகையில் ...நாங்கள் ஏன் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போகிறோம் என்றால், தமிழகத்தில் படைப்பு தொழில் செய்கின்ற கம்மாளர்கள் சுமார் 52 லட்சம் வாக்காளர்கள் கொண்டு ஆறாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் . மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் தரப்படவில்லை.




0 Comments