// NEWS UPDATE *** ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி *** திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை கேட்டு கோரிக்கை மனு

திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை கேட்டு கோரிக்கை மனு

 திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர் ..தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் திருச்சியில் புகழ்பெற்ற நத்தர்ஷா தர்காவில் வருடம் ஒருமுறை  சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் .இந்த விழாவில் மத பாகுபாடுயின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்கின்றனர்,


மேலும் தமிழக மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு வழிபாடு செய்ய வருகின்றனர்.குறிப்பாக சந்தனக்கூடு விழா அன்று பெரும்பாலான மக்கள் சந்தனக்கூடு விழாவை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வருகின்றனர்.புகழ்பெற்ற மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இதே போல் இந்த விழா வருகிற 4-ம் தேதி 1029 வது.சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.

இதை கருத்தில் கொண்டு உள்ளூர் விடுமுறை அளித்தால் குடும்பத்துடன் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவே மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை விடுவதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனஜதமிழக தர்காக்கள் பேரவை சார்பில் மூன்றவது முறையாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.இதில் தமிழக தர்காக்கள் பேரவை மாநிலத் தலைவர் அல்தாப் உசேன், மாநில பொதுச் செயலாளர் லியாகத் அலி, மாநில செய்தி தொடர்பாளர் அப்துல் ரகுமான் என்கிற அப்பா குட்டி, மாநில துணை செயலாளர் சவுண்ட் சர்வீஸ்  ஆரூண், மாநில ஆலோசகர் சுபேர் உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்

Post a Comment

0 Comments