// NEWS UPDATE *** ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி *** சாலை விபத்தில் பலியான ஆண் நபர் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

சாலை விபத்தில் பலியான ஆண் நபர் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் ஏறும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வாகன விபத்தில் இடது கால் மற்றும் இடுப்பு சிதைந்த நிலையிலும் மற்றும் இடது கை தலை மற்றும் முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று,மருத்துவர் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டார் என்றார். 

இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய முதல் நிலை காவலர் கிருஷ்ணகுமார் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவரும் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் குழுமிக்கரை மயானத்தில் தெற்கு புலனாய்வு பிரிவு காவல் நிலைய முதல் காவலர் கிருஷ்ணகுமார் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை  நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து குழுமிக்கரை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Post a Comment

0 Comments