// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சியில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சியில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.


தேமுதிக 22 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா என முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீரங்கம்ச மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.


திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான பாரதிதாசன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தேசிய முற்போக்கு திராவிட கழக துணை செயலாளர், டெல்டா மண்டல பொறுப்பாளர், முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 







இந்நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதி செயலாளர்கள் பாலாஜி மற்றும் புகழேந்தி ஏற்பாடு செய்திருந்தனர் ‌ . இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.

Post a Comment

0 Comments