// NEWS UPDATE *** ஜெம் வீரமணி வழக்கில் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு: போக்சோ நீதிமன்றம் *** இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அதிகாரத்திலும், பொது வாழ்விலும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வருவதையொட்டி, திருச்சி மாநகர மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘சேவை தீப ஜோதி பேரணி’ நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அதிகாரத்திலும், பொது வாழ்விலும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வருவதையொட்டி, திருச்சி மாநகர மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘சேவை தீப ஜோதி பேரணி’ நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அதிகாரத்திலும், பொது வாழ்விலும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வருவதையொட்டி, திருச்சி மாநகர மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘சேவை தீப ஜோதி பேரணி’ நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, திருச்சியிலுள்ள அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


முன்னதாக, கட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு உரை பெரிய திரை மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இதனை அங்கு திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் கைதட்டி உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.


இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் திரண்டு, பிரதமர் மோடியின் சாதனைத் திட்டங்களை விளக்கும் பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு, தீப ஜோதியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.


இந்தப் பேரணிக்குத் திருச்சி மாநகரக் காவல்துறையினர் எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, பா.ஜ.க.வினரின் பேரணிக்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments