தமிழக சிறைச்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 18 சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படும் தமிழ்நாடு தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் திருச்சி மத்திய சிறை முற்றுகைப் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக தமஜக தலைவர் கே.எம். சரீப் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர், திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று காலை திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக திருச்சி மத்திய சிறை நோக்கி சென்றனர். மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அப்பகுதியிலேயே தலைமைச் செயலாளரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
தற்போதைய தலைமைச் செயலாளர் தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியால் நியமிக்கப்பட்டவர். ஆயுள் சிறைவாசிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை அவர் மறுப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே, அவரை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்.
இதுவரை 7 அரசாணைகள் தலைமைச் செயலாளரால் வெளியிடப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற அவல நிலையை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. இந்த நிலை தொடராமல் இருக்க தலைமை செயலாளரை மாற்ற வேண்டும். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளுக்கு பரோல் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.






0 Comments